பந்தலுார் : பந்தலுார் அருகே உப்பட்டியில், நெல்லியாளம் நகராட்சி சார்பில், தீவிர துாய்மை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்தார்.துப்புரவு ஆய்வாளர் பாலகுமார் முன்னிலை வகித்து, 'பொதுமக்கள் துாய்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்; 'பிளாஸ்டிக்' உபயோகத்தை தவிர்ப்பது,' குறித்து விளக்கமளித்தார். அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மக்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன. துாய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.