உடுமலை : டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில், ஜூலை 3ல் தொடங்கும் எட்டாம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, டிச., 3ம் தேதி நடக்கிறது.
நுழைவுத்தேர்வில், 2023 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 11.50 முதல், 13 வயது வரையுள்ள, ஏழாம் வகுப்பு பயிலும் மற்றும் தேர்ச்சி பெற்ற சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம்.விண்ணப்பம், மாதிரி வினாத்தாள் அடங்கிய தகவல் குறிப்புகளை, பழங்குடியினர், 555 ரூபாயும், இதர வகுப்பினர், ஆயிரம் ரூபாயும், www.rimc.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் செலுத்தி பெறலாம்.
இல்லாதபட்சத்தில், 'THE COMMANANT RIMC DEHRADUN' என்ற பெயரில், STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN (BANK CODE 01576), UTTARAKHAND என்ற வங்கியில் மாற்றத்தக்க வகையில், வரைவோலையாக எடுத்து, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரி, டேராடூன் -248 003, உத்தரகண்ட் மாநிலம் என்ற முகவரிக்கு, அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை (இரட்டை பிரதிகளில்), தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சென்னை -3' என்ற முகவரிக்கு, 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.