செங்கை மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமனம் | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
செங்கை மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமனம்
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
Latest district News

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முதல்வராக பணிபுரிந்த முத்துகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அனிதா என்பவர், முதல்வர் பொறுப்பில் இருந்தார்.இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்த நாராணயசாமியை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வராக பணியிட மாற்றம் செய்து, நேற்று முன்தினம் அரசு உத்தரவிட்டது. அவர், செங்கல்பட்டில் நேற்று பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.முதல்வர் நாராயணசாமி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கல்லீரல் துறை தலைவராக 25 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்.கொரோனா தொற்று பரவலின்போது, கிண்டி 'கிங்ஸ்' மருத்துவமனையின் இயக்குனராக சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X