சீர்காழி அருகே கடல் நீர் உட்புகுந்தது: 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இளம் நாற்றுகள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு ஊராட்சி சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் 280 ஏக்கர் விளை நிலம் உள்ளது.இந்த நிலங்களில் ஆற்று நீர் பாசனத்தை கொண்டு விவசாயிகள் இரு போக சாகுபடி செய்து வந்தனர். 2004ல் ஏற்பட்ட 'சுனாமி'யால் கடல் நீர் உட்புகாமல் தடுப்பதற்காக இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்கரை முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் கடந்த 18 ஆண்டுகளாக அவ்வப்போது கடல் நீர் உட்புகுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, தடுப்பணை அமைக்க வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு, காவிரி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வருகிறது.

இதனால் காவிரி கடைமடை பகுதியான சின்ன பெருந்தோட்டம் கிராம விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்தனர்.விளை நிலங்களை பண்படுத்தி, நாற்றங்கால் தயார் செய்து விதை விட்டனர். அந்த விதைகள் முளைத்து இளம் நாற்றுகளாக உள்ள நிலையில் கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்வதற்காக பயிர் செய்யப்பட்ட இளம் நாற்றுகள் கருகின.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், வடிகால் வசதி இல்லாததால் உப்பு நீர் வடிய நீண்ட நாட்கள் ஆகும். இதனால் இவ்வாண்டு சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையிலிருந்து மீண்டும் விவசாயத்தை தொடர்ந்து செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடல் நீர் உட்புகாமல் தடுப்பதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அல்லிமேடு- நெய்தவாசல் இடையே நிரந்தர எல்லைக்கரை அமைத்து தர மத்திய-   - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X