பெண்ணாடம்:நண்பரின் தாயை அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக கடந்த 17ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சண்முகம், அவரது மனைவி சாந்தி, தங்கை ரத்னா ஆகியோர் சேர்ந்து பவுனாம்பாளை இரும்பு கம்பியால் தாக்கினர்.படுகாயமடைந்த பவுனாம்பாள் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சண்முகம் உள்ளிட்ட மூவர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவுனாம்பாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாந்தி, ரத்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.