ஆக்கிரமிப்பில் காதர் பாட்சா கண்மாய்; 'சர்வே' செய்தும் அகற்ற முடியாத அவலம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



போடி- -போடி அருகே அணைக்கரைப்பட்டி காதர் பாட்சா கண்மாய் 'சர்வே' செய்தும் அகற்றப்படாததால் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்

.போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கோம்பை புலத்தில் காதர் பாட்சா கண்மாய் (துலக்கன்குளம் கண்மாய்) 25 ஏக்கரில் அமைந்துள்ளது. முத்துக்கோம்பை, சின்னமுடக்கு, பெரியமுடக்கு உட்பட பல்வேறு பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இலவம், தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இக்கண்மாய் மூலம் 250 ஏக்கர் நேரடியாகவும், 300 ஏக்கர் மறைமுக பாசனம் நடந்தது. தற்போது இக்கண்மாய் முழுவதும் தனி ஆக்கிரமிப்பால் சிக்கி 5 ஏக்கர் அளவில் கூட இல்லாத அளவில் சுருங்கியுள்ளது. இதனால் மழைநீரை முழுவதும் சேமிக்க முடியாமல் விவசாயத்திற்கு தேவையான நீர் இன்றி சிரமம் அடைகின்றனர். இப் பகுதி விவசாயிகள் கருத்து



மழை




நீரை




தேக்க




முடியவில்லை



பி.ராஜா, விவசாயி, பி.அணைக்கரைப்பட்டி: இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள முத்துக்கோம்பை, சின்னமுடக்கு, பெரியமுடக்கு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன் அடைவார்கள். கண்மாய் துார்வாரி கரை உயர்த்தப்படாததால் முட்செடிகள் வளர்ந்து மழைநீரை முழுவதும் தேக்க முடியவில்லை. அணைக்கரைப்பட்டி ஆற்றுப் பகுதியில் வரும் நீரை பம்பிங் செய்து ஊராட்சி குடிநீராக சப்ளை செய்தது. தற்போது ஆற்றுப்பகுதி கழிவுநீராக வருவதால் குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. காதர்பாட்சா கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி நிலத்தடி நீரை தேக்க வேண்டும்.



சர்வே செய்தும் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை



எம்.ரமேஷ், விவசாயி, பி.அணைக்கரைப்பட்டி: காதர்பாட்சா கண்மாயில் நீர் முழுதும் தேங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியதால் பொதுப்பணித்துறை கண்மாய் பகுதியை சர்வே மேற்கொண்டு கற்கள் ஊண்டினர். அதன் பின் இன்று வரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் விவசாய சங்கம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, முறையாக மீண்டும் சர்வே மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாய் தூர்வாரி மழை நீரை முழுவதும் தேக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X