போலீஸ் செய்தி
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி:- தர்மபுரி மாவட்டம் பொம்மிடிபட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் 20. தர்மபுரியில் இருந்து கொடைக்கானலுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்தார். இவரது நண்பர்கள் காரில் வந்தனர். இவரும், இவரது நண்பர் ஹரியும் டூவீலரில், தேவதானப்பட்டி --வத்தலக்குண்டு ரோடு காட்ரோடு அருகே செல்லும்போது, கம்பத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஒட்டி வந்த கார், டூவீலரில் மோதியது. இதில் சந்தோஷ், ஹரி பலத்த காயம் அடைந்தனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தோஷ் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ---நீரில் மூழ்கி வாலிபர் பலிபோடி: -போடி புதுக்காலனியில் வசிக்கும் பிரசாத் மகன் நரேந்திரன் 20. மதுரையில் உள்ள கல்லூரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக போடி வந்தவர் 2 நாட்களுக்கு முன்பு டூவீலரில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று குரங்கணி நரிப்பட்டி அருகே உள்ள கமலாட்சி தண்ணீர் கிடங்கில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். குரங்கணியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலிதேவதானப்பட்டி:- தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாயி 48. இவர் தேவதானப்பட்டி -பெரியகுளம் பைபாஸ் ரோடு ஜெயமங்கலம் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாயி பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பெண் பலிதேவதானப்பட்டி:- பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டி- வேல் நகர் ரோட்டில் இ சேவை மையம் அருகே முகத்தில் காயத்துடன் அடையாளம் தெரியாத 60 வயது பெண் கிடந்தார். அருகேயிருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். எ. புதுக்கோட்டை வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கொலை மிரட்டல்: விடுத்தவர் கைதுதேனி: தேவாரம் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகள் கவுசல்யா 20. இவரை அதேத்தெருவை பாக்கியம் 58, அசிங்கமாக பேசி என் நகையை கொடுக்க கூறி கொலை மிரட்டல் விடுத்தார். தேவாரம் எஸ்.ஐ., பாண்டிச்செல்வி, மிரட்டல் விடுத்த பாக்கியம் மீது பெண் வன்கொடுமை தடுப்புப்பிரிவில் கைது செய்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X