போடி-- தேனி இடையே அகல ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பு | தேனி செய்திகள் | Dinamalar
போடி-- தேனி இடையே அகல ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பு
Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
 

மதுரை- போடி இடையிலான 90.4 கி.மீட்டர் கேஜ் பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி 2011ல் துவங்கியது. கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே பணிகள் 2016ல் பா.ஜ., அரசு அமைத்தபின் திட்டத்திற்கு தேவையான ரூ.354 கோடிநிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவு படுத்தினர்.




latest tamil news

ஒவ்வொரு கட்டமாக மதுரை- உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை பணிகள் நிறைவு செய்தனர். மதுரை- தேனி இடையே 75 கி.மீ., அகல ரயில்பாதை பணி முடிந்து கடந்த மே 26ம் தேதி முதல் மதுரை -தேனி இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

காலையில் மதுரையில் இருந்து வரும் ரயில் பல மணிநேரம் தேனி ஸ்டேஷனில் நிறுத்தி மாலையில் மதுரை செல்கிறது. சென்னைக்கு தேனியில் இருந்து ரயில் இயக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் போடி வரை பணிகள் நிறைவு பெற்ற பின் சென்னைக்கு ரயில் இயக்கும் முடிவில் உள்ளது.


பணிகளில் வேகம்:இதனால் தேனி- போடி இடையிலான 15 கி.மீ., அகல ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 கோடி செலவில் பணிகள் நடக்கிறது. தேனி -போடி இடையே 30 சிறுபாலங்கள், 3 பெரிய மேம்பாலங்கள் பணி முடிந்துள்ளன. 8 கி.மீ.துாரத்திற்கு தண்டவாளம் பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதியுள்ள 7 கி.மீ.துாரத்திற்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது.





போடியில் ரயில்வே ஸ்டேஷன் பணிகளும் விரைவுபடுத்தப்படுகிறது. போடி ஸ்டேஷனில் ரயில்களுக்கு தண்ணீர் ஏற்றும் வசதி, சுத்தம் செய்யும் வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக தனி பைப் லைன் டிராக் அமைக்கப்படுகிறது. ரூ.75 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள் டிசம்பரில் நிறைவு பெறும். இதற்காக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X