குறைகிறது நுால் விலை; அதிகரிக்கும், இனி ஆர்டர்கள்!
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர் : வேகமாக குறைந்து வரும் பஞ்சு, நுால் விலைகள்; படிப்படியாக அதிகரிக்கும் ஆர்டர் வருகையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் எழுச்சி பெறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, கேண்டி (356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்து உச்சம் தொட்ட பஞ்சு விலை, அபரிமிதமாக உயர்ந்த ஒசைரி நுால் விலை, தொடரும் ரஷ்யா --- உக்ரைன் போர் போன்றவை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது.அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஆயத்த ஆடை ரகங்கள் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து, ஆடை வாங்குவதை, உலகளாவிய மக்கள் குறைத்துக்கொண்டுள்ளனர்.வர்த்தக மந்த நிலையால், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கடந்த ஐந்து மாதங்களாக ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது. தற்போது, பஞ்சு விலை குறையத் துவங்கியுள்ளது.

ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 74 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தமிழக நுாற்பாலைகளும் ஒசைரி நுால் விலையை தொடர்ந்து குறைத்துவருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் கிலோவுக்கு 110 ரூபாய் நுால் விலை குறைந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை சீராகிவருவதால், இன்னல்கள் நீங்கி, தொழில் பிரகாசிக்கும் என்கிற நம்பிக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் மத்தியில் பிறந்துள்ளது.




சாதகமான சூழல்



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன்:புதிய பருத்தி சீசன் துவங்கிவிட்டது. கடந்தாண்டைவிட இந்தாண்டு உள்நாட்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நிலையை தொட்ட பஞ்சு விலை, சரியத்துவங்கிவிட்டது.

விரைவிலேயே கேண்டி 60 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயாக இயல்பு நிலையை அடைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. பஞ்சு விலையை பின்பற்றி, தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை குறைத்து வருகின்றனர்; இது ஒரு நல்ல துவக்கம். ஏற்றுமதி பின்னலாடை விலையில் 10 முதல் 12 ரூபாய் வரை குறைக்கமுடியும் என்பதால், பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொள்வது எளிதாகிறது.

திருப்பூரில் 10 டாலருக்கும் (750 ரூபாய்) குறைவான விலையுள்ள, கேஷூவல் பின்னலாடை ரகங்களே அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், இவ்வகை ஆடை ரகங்கள் விற்பனை தடையின்றி சீராக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா என உலகளாவிய நாடுகளில் தனது சங்கிலித்தொடர் வர்த்தக கிளைகளை கொண்டுள்ள வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், மீண்டும் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை வழங்கத் துவங்கிவிட்டன. தீபாவளிக்குப்பின் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும்; அதற்கான சாதகமான சூழல் தற்போது உருவாகி வருகிறது.




மந்த நிலை விலகும்



தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரன்:கர்நாடக பஞ்சு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இருந்து, நவம்பர் மாதம் பஞ்சு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேண்டி 74 ஆயிரம் ரூபாயாக உள்ள பஞ்சு, 60 ஆயிரம் ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுாற்பாலைகளும் ஒசைரி நுால் விலையை குறைத்துவருகின்றன. உள்நாட்டில் ஆயத்த ஆடை வர்த்தகம் இன்னும் எழுச்சி பெறவில்லை.

தீபாவளி நெருங்குவதால், ஓரளவு சீராக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.ஆடை வர்த்தக மந்தநிலை, அதிக விலைக்கு நுால் வாங்கி தயாரித்த ஆடைகளை சந்தைப்படுத்தவேண்டியுள்ளதாலும், நுால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாலும், பின்னலாடை உற்பத்தியாளர்கள் நுால் வாங்குவதை குறைத்துள்ளனர். அடுத்த ஓரிரு மாதங்களில், வர்த்தக மந்த நிலை விலகும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.



இயல்பு நிலை திரும்பும்



இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன்:மூலப்பொருள் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரும், புதிய பொருட்கள் வாங்குவதை தாமதப்படுத்தினர். கடந்த இரு மாதங்களாக, நுால், துணி, ஆடை என, தங்கள் கையிருப்பு சரக்குகளை வெகுவாக குறைத்துள்ளனர்.நுால் மற்றும் துணி உற்பத்தியாளர்கள், 50 சதவீத உற்பத்தியை குறைத்துள்ளனர். இது, கொரோனா தொற்று பயம் இல்லாத முதல் தீபாவளி. பண்டிகை கால சில்லரை ஆடை வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

எதிர்பார்த்தபடி பஞ்சு, பாலி யஸ்டர் விலைகளும் குறைந்துள்ளன. வெகு விரைவில், தமிழக ஜவுளித்துறை இயல்புநிலைக்கு திரும்பும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகள் வரத்துவங்கியுள்ளன. தேவை மேலும் அதிகரிக்கும்வரை, நுாற்பாலைகளை குறைந்த உற்பத்தி நிலையிலேயே இயக்குவது என முடிவு செய்துள்ளோம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X