பொங்கலுார் : பொங்கலுார் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அபாயகரமான கழிவுகளை சிலர் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவை மழை நீரால் விவசாய நிலங்கள், குடிநீர் கிணறுகள், குளம் குட்டைகளுக்கு அடித்து செல்லப்படுகிறது.
இதனால், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, யார் கொண்டு வந்து கொட்டுகின்றனர், என்பது குறித்து யாருக்கும் தெரிவதில்லை.எனவே, கழிவு கொட்டுவோர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.