திருப்பூர் : திருப்பூரில், செயற்கை கால் அளவீடு முகாமில், 23 பயனாளிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை கால் அளவீடு முகாம் திருப்பூர் மங்கலம் ரோடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 23 பயனாளிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு செயற்கை கால் வழங்க அளவீடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சக் ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, செயலாளர் தமிழ்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். அளவீடு செய்யப்பட்டவர்களுக்கு வரும் வாரத்தில் செயற்கை அவயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.