திருப்பூர் : திருப்பூர் குமரன் ரோடு டவுன் ஹால் எதிரில் ஹை சாய்ஸ் எனும் பெயரில் புதிய ஆயத்த ஆடையகத்தை வர்ஷா இன்டர்நேஷனல் சேர்மன் ராஜா சண்முகம் திறந்து வைத்தார்.
ஹை சாய்ஸ் ஆயத்த ஆடையக இயக்குனர் கருணாம்பிகா, கோமாதா இன்டர்நேஷனல் முருகானந்தம், ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் சேர்மன் பழனிச்சாமி, வீர அஸ்வத், ஹை சாய்ஸ் நிர்வாக இயக்குனர் ரவி சுப்பையன், இயக்குனர் கரன் வர்கடே, சுப்பையா சென்ட்ரல் பள்ளி தாளாளர் சுகுமார், திருப்பூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வசந்தகுமார் முதலியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை அனுக்ரஹா பேஷன்ஸ் சேர்மன் மோகன் துவக்கி வைக்க ராஜா சண்முகம் பெற்றுக் கொண்டார்.
நிர்வாகிகள் கூறுகையில், ''இங்கு ஆண்களுக்கான அனைத்து பிராண்ட் பேன்ட், ஷர்ட்கள், டிஷர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் வேர், திருமண கோட், ஷர்வானி, தலைப்பாகை, பெண்களுக்கான சுடிதார், சல்வார்கள், குழந்தைகளுக்கான ரெடிமேட் ரகங்கள் என அனைத்தும் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு லேட்டஸ்ட் டிசைன்களில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை துவக்கப்பட்டுள்ளது'' என்றனர்.