திருப்பூர் : வெள்ளகோவிலில் கோவில் பூசாரியை கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில், உப்பு பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 51. அருகிலுள்ள மாகாளியம்மன் கோவிலில், பூசாரியாக இருந்து வந்தார். இவர் மனைவி மல்லிகா, 45. இரு மகன்கள் உள்ளனர். மல்லிகா வெள்ளகோவில் நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்களது வீட்டுக்கு அருகில், கார் டிரைவர் பிரேம்குமார், 32 என்பவர் வசிக்கிறார். தன்னைப்பற்றி ஊருக்குள் மாரிமுத்து பலரிடம் தவறான தகவலை சொல்கிறார் என்று கூறி, அவரிடம், பிரேம்குமார் தகராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றியதில், மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை காரில் கொண்டு சென்று, லக்கமநாயக்கன்பட்டி அருகே அமராவதி ஆற்றில் வீசினார்.இச்சூழலில், கணவரை காணவில்லை என மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், மாரிமுத்துவை, பிரேம்குமார் கொலை செய்தது தெரிந்து, அவரை கைது செய்தனர்.