திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, நஞ்சப்பா பள்ளி அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ராயபுரம், சாயப்பட்டறை வீதியை சேர்ந்த சூரியகாந்த், 19 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.