வங்க கடல் - பாலாறு முகத்துவாரம் அடைப்பு: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதால் அச்சம்
Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகில், வங்க கடலில் பாலாறு கலக்கும் முகத்துவாரம், மணல் குவிப்பால் அடைபட்டுள்ளது. இதனால் பருவ மழை வெள்ளம், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், மீனவ குப்பங்கள் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர். ஆண்டில் ஒன்பது மாதங்களே மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைகாலம், பருவமழை கால மீன்பிடி குறைவு, கனமழை, புயல் என, மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.latest tamil newsஉவர்ப்பு நீர்
இது ஒருபுறமிருக்க, கடலரிப்பால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை, பாதுகாக்க கடற்கரை மணற்பரப்பு இன்றி பாதிக்கப்படுகின்றனர்.இச்சூழலில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக பாலாறு, வங்க கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை, சிறிய மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்த, இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடக மாநில பகுதியில் தோன்றும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியே கடக்கிறது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதிகள் இடையே, வங்க கடலில் பாலாறு கலக்கிறது.ஆற்றின் முகத்துவார பகுதி, 20 ஆண்டுகளுக்கு முன் பல அடிகள் ஆழத்துடன், இயற்கைச் சூழலுடன் இருந்தது. இயற்கை நியதியின்படி, ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தது. கடலின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலந்தது.

வெவ்வேறான தன்மையுள்ள நீர் கலப்பால், மீன்களுக்கு உகந்ததாக அமைந்து, இப்பகுதியில் மீன்கள் குவிந்தன; இனப்பெருக்கத்தால் மீன்வளம் பெருகின.மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாத நிலையில், ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கியபோது, முகத்துவார பகுதியில் மணல் குவியலால் மேடு ஏற்பட்டு, ஆறு துார்ந்து அடைபட்டது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசடைந்தது.


தடுப்பணை
மழை நீர், கடலில் வீணாக கலப்பதையும், கடல் நீர் ஊடுருவுவதையும் தடுக்க, 2019ல், இப்பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.அணை அமைந்த பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையில் தேங்கும் மழை நீர், குடிநீர், விவசாய நீராதாரமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, முகத்துவார மணல் அடைப்பால், ஆற்று நீர் கடலிலும், கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கைச்சூழல், 20 ஆண்டு களாக தடைபட்டுள்ளது.ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகிறது. இதனால் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் பகுதி குடியிருப்புகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் கருவேல புதர் சூழ்ந்து, ஆற்றின் இயற்கைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் முகத்துவார பகுதியை துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் இயற்கைத்தன்மை உருவாகும்.மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தலாம். சதுரங்கப்பட்டினம் முதல், பரமன்கேணி வரையுள்ள மீனவர்கள் பயன்பெறுவர்.துறைமுகம் அமைந்தால், படகுகளை கடலுக்கு எடுத்து செல்வது எளிதாகும். படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும் முடியும். இதுகுறித்து மீனவர்கள், அரசுத் துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.பழைய நிலை தேவை

ஆற்று முகத்துவாரம், நீண்ட காலத்திற்கு முன், மிக ஆழமாக இருந்தது. இப்போது மணல் அடைத்து, முகத்துவாரம் துார்ந்துள்ளது. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி, பழைய இயற்கை நிலையை உருவாக்கவேண்டும். இதனால் மீன் வளம் அதிரிக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரப்படவில்லை என்றால், வாயலுார், புதுப்பட்டினம் பகுதிகள் வெள்ளம் மூழ்கும்.- மீனவர்கள், வாயலுார், உய்யாலிகுப்பம்.இயந்திர படகு வாங்க மனு

இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது சாதாரண விசை படகுகளில், மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு இயந்திர படகு அவசியம். இப்படகு வாங்கி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். படகுகள் நிறுத்த துறைமுகம் இல்லை. இதனால் படகு வாங்காமல் தவிர்த்து, தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்று முகத்துவாரத்தில், சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி, மீன்வள இயக்குனரிடம் மனு அளித்துள்ளேன்.க.சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், புதுப்பட்டினம்.


முட்டுக்காடில் துார் வாரும் பணி
வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது. அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.

வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழம்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து நீர்வளத்துறை மூலம், தலைமை பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர் திலிப்குமார் ஆகியோர், மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது. இரண்டு 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இப்பணி நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAISANKAR - Mamallapuram,இந்தியா
06-அக்-202210:09:53 IST Report Abuse
JAISANKAR இந்த அரசு என்ன செய்தாலும் குறை சொல்ல உங்களை யாரோ நியமித்து இருக்கின்றனர்
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
06-அக்-202220:14:40 IST Report Abuse
சாண்டில்யன்,,,,,...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-அக்-202209:58:02 IST Report Abuse
sankaranarayanan சேது சமுத்திர திட்டம் அரைகுறை பணியில் ஈடுபட்ட இயந்திரங்களை வைத்து கடலில் தூர்வாரியது போன்று இங்கும் நதிகளின் முகத்வாரத்தில் தூறு வரலாமே. பாதியிலேயே நின்றுவிடலாமே தண்டம் தண்டம் தண்டம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202209:29:43 IST Report Abuse
duruvasar செந்தில் பாலாஜி க்கு இந்த தகவலை அனுப்புங்கள். நாளை காலை 11.05 மணிக்கு அள்ள ஆரம்பிச்சாங்க ரத்னா இரவுக்குள் பாலாறு தோன்றும் கர்நாடாக எல்லை வரை ஒரு கைப்பிடி அளவு மணல் கூட இல்லாமல் சுத்தமாக தொடைச்சு எடுத்துடுவாங்க.
Rate this:
06-அக்-202210:39:00 IST Report Abuse
அப்புசாமிஅது கடல் மணல் தம்பி. அதை வெச்சு நாக்கு வழிக்கக்கூட முடியாது. நல்ல மண்ணா இருந்தா அணில் அண்ணாச்சி என்னிக்கோ நோண்டி கொண்டு போயிருப்பாரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X