பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 18ல் சாலை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள
தாக அறிவித்துள்ளனர்.
ஈரோட்டில், தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் திருமுருகன் கூறியதாவது:
தமிழக நெடுஞ்சாலை துறையில் பெண்கள் அதிகமாக பணி செய்கின்றனர். திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை-கீரனுார் பிரிவில் பணியாற்றும் பெண் சாலை ஆய்வாளர்கள், தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். இப்பிரச்னையில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உரிய அரசாணை இருந்தும், பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும். பதவி உயர்வு இன்றி கடைசி வரை சாலை ஆய்வாளராக உள்ளவர்களுக்கு அரசாணை எண்: 163ன்படி சாலை ஆய்வாளர் நிலை-1 என்ற ஒரே பணியிடமாக வகைப்படுத்தி, சிறப்பு நிலை, தேர்வு நிலை வழங்க வேண்டும். அரசாணை எண்: 555ன்படி சாலை ஆய்வாளர் பணியிடத்தை தமிழக அரசின் நிரந்தர பணியிட வரிசையில் கொண்டு வர வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு தற்காலத்துக்கு உடன்பாடு இல்லாத மிதிவண்டி படியை, அரசாணை எண்: 307ன் படி டூவீலருக்கான படியாக வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர் என்ற பெயரை, திறன்மிகு உதவியாளர் என, மாற்றம் செய்வதை கைவிட வேண்டும என, வலியுறுத்தி, வரும், 18ல் சென்னை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.