விஜயதசமியை முன்னிட்டு 'வித்யாரம்பம்' ஆர்வம் காட்டாத அரசு பள்ளிகளால் அதிர்ச்சி
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

'வித்யாரம்பம்' தினமான நேற்று, அரசு பள்ளிகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜயதசமி தினமான நேற்று, வழக்கமாக அரசு பள்ளிகளிலும் மழலையர்களை பள்ளியில் சேர்க்கும், 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடக்கும். இதில், அரசு பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு, பெற்றோரிடம் பேசி, தங்கள் பகுதியில் உள்ள மழலையர்களை தேடி கண்டு
பிடித்து விஜயதசமி தினத்தில் சேர்க்க வைப்பர். ஆனால், இந்தாண்டு அரசு பள்ளிகள், நேற்று, அரசு விடுமுறையால் பூட்டிக்கிடந்தன. விஜய

தசமி நாளில், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வந்த பெற்றோர், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்து, துவக்க பள்ளி ஆசிரியைகள் கூறியதாவது: அரசு பள்ளி
களில், எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புக்கு என, தனித்தனியாக ஆசிரியை
கள் இல்லை. ஆயாக்களும் கூட கிடையாது. அங்கன்வாடி பணி
யாளர்கள் தான், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.
மழலைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சூழல் உள்ளது. ஏற்கனவே, அங்கன்வாடி பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமையுடன் உள்ளனர். பள்ளிகளிலும் ஆசிரியைகள்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
மேலும், ஜூலை, 31ல், 3 வயது பூர்த்தியாகும் குழந்தை எல்.கே.ஜி., 4 வயது பூர்த்தியாகும் குழந்தை யு.கே.ஜி.,லும், 5 வயது பூர்த்தியாகும் குழந்தை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதமே பள்ளி சேர்க்கை பூர்த்தியாகி விடும். விடுபட்ட ஒன்றிரண்டு மழலைகள் மட்டுமே, சம்பிரதாயத்துக்காக விஜயதசமி நாளில் சேர்ப்பர். இது, இந்து மத சம்பிரதாய நிகழ்ச்சி என்பதால், விஜய
தசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கு பள்ளி கல்வித் துறை அதிக ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X