கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தியதால் பூசாரி கொலை; கார் டிரைவர் கைது
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


வெள்ளகோவில் அருகே, கள்ளத்
தொடர்பை அம்பலப்படுத்தியதால், கோவில் பூசாரியை கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில், உப்புபாளையம் அருகே, வேலகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 51; இவருக்கு மல்லிகா, 45, என்ற மனைவி
யும், மோகன்ராஜ், 25, மற்றும் 16 வயதில் இருமகன்கள் உள்ளனர். மல்லிகா வெள்ளகோவில் நகராட்சியில், துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். மாரிமுத்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலில் பூஜை செய்து வந்தார். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரேம்குமார், 32, சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த, 3ல், மாரிமுத்துவும், பிரேம்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின், மாரிமுத்துவை காணவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து, மல்லிகா வெள்ளகோவில் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தவே, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரேம்குமார் தகாத உறவு வைத்திருந்ததை, மாரிமுத்து பார்த்துவிட்டு சிலரிடம் கூறியதால் மாரிமுத்துவை பிரேம்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்து, ஆம்னி காரில் சடலத்தை எடுத்துக்கொண்டு, லக்கமநாயக்கன்பட்டி அருகே செல்லும் அமராவதி ஆற்றில் வீசியதாக
போலீசார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அமராவதி ஆற்றில் போலீசார், 3 மணிநேர தேடுதலுக்கு பின், இரவு, 2:00 மணிக்கு, சடலத்தை கைப்பற்றினர். பின், காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X