பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக நேற்று முதல் மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 92 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 725 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 81.70 அடியாக இருந்தது.

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு கடந்த 29ம் ‍தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 185 கன அடி தண்ணீர் வந்தது.
மாயனுார் கதவணை
காவிரியாற்றில், மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 14 ஆயிரத்து, 792 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 14 ஆயிரத்து, 976 கன அடியாக, தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 13 ஆயிரத்து, 856 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நேற்று காலை, நிலவரப்படி, தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 32.87 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.64 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் வினாடிக்கு, 104 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில், கரூரில் மட்டும், 1.4 மி.மீ., மழை பெய்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X