நடுவீரப்பட்டு,-சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கெங்காசலம்,47; அப்பகுதியில் உள்ள கோட்டையம்மன் கோவிலுக்கு செல்ல கெங்காசலத்தின் காலிமனையை பொதுமக்கள் வழியாக பயன்படுத்தி வந்தனர்.நேற்று கெங்காசலம் தமது காலி மனைக்கு வேலி கட்டினார். அப்பகுதியை சேர்ந்த பெருமாள்,52; அவரது மனைவி தமிழ்செல்வி,47; ஆறுமுகம்,60; ஜெயராமன்,52, ஆகியோர் கெங்காசலத்திடம் ஏன் வழியை மறைத்து வேலி கட்டுகிறாய் என கேட்டு, தகராறு செய்து, அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். கெங்காசலம் கொடுத்த புகாரின் பேரில், பெருமாள் உட்பட நால்வர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.