மின் கட்டணம் ஏறிடுச்சு.. மின் சிக்கனம், இனி அவசியம்!
Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அவிநாசி :'ஸ்டார் ரேட்டிங்' கொண்ட மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்' என, மின்வாரியத்தினர் கூறுகின்றனர்.

மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் நோக்கிலான தொழில்நுட்பத்துடன், மோட்டார், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கென மின் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக 'ஸ்டார் ரேட்டிங்' கொண்ட சாதனங்கள் குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக திறனோடு செயல்படும் என்பது தான், விஷயம்.

அத்தகைய மின்சாதன பொருட்களின் மின் சேமிப்பு திறன் அடிப்படையில், மத்திய எரிசக்தி துறை, 'பீரோ ஆப் எனர்ஜி எபீஷியன்சி'(பி.இ.இ.,) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி அத்தகைய பொருட்களுக்கு 'ஸ்டார் ரேட்டிங்' வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக, தமிழகத்தில் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (டான்ஜெட்கோ) 'நோடல் ஏஜென்சி'யாக நியமித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், சாய ஆலைகள் என, ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ள திருப்பூரில், மின் பயன்பாடு மற்றும் மின் செலவு என்பது மிக அதிகம்.

தற்போதைய சூழலில், மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்துக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்ற அச்சம் தொழில் நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, மின் சிக்கனம் என்பது, தவிர்க்க முடியாததாக மாறிப்போயிருக்கிறது.





மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''பெரிய, பெரிய தொழில் நிறுவனங்கள் மின் சிக்கனத்தை மையப்படுத்தி, ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின்சாதனங்களை தான் பொருத்தியுள்ளன. இதனால், அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக, அரசின் இலவச மின் இணைப்பு பெற்று, மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

குறைந்தபட்சம், 4 ஸ்டார் ரேட்டிங் உள்ள மின் சாதனங்களை பொருத்தினால் தான் மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்குகிறோம். பொதுமக்களும், 'ஸ்டார் ரேட்டிங்' மின் சாதன பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்றனர்.



பயிற்சி எப்போது?



திருப்பூர் நகர மற்றும் கிராமப்புறங்களில், பொதுமக்களிடம் இதுகுறித்து பெரியளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. 'ஸ்டார் ரேட்டிங்' கொண்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதால் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க முடியும், ஏ.சி., 'டிவி' போன்ற மின் சாதனங்களை ரிமோட் மூலம் நிறுத்துவதைவிட 'சுவிட்ச்'சையே அணைத்து வைப்பதால் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும் என்பது உள்ளிட்ட சின்ன, சின்ன விஷயங்கள் கூட மின் சேமிப்புக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில், இதுகுறித்த விஷயங்களை விழிப்புணர்வாக ஏற்படுத்த வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalasamy N - CHENNAI,இந்தியா
07-அக்-202219:56:07 IST Report Abuse
gopalasamy N மக்கள் விடியல் ஆச்சி வோட்டு போட்டு மிகவும் சந்தோசமாக உள்ளனர்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-அக்-202202:52:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உண்மை வெளியே வந்து விட்டது .. ஹா ஹா...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202219:14:30 IST Report Abuse
Mohan இததக்குதான் பல்பு வாங்கக்கூடாது.
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
07-அக்-202218:32:46 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் அரிசி பால் இதற்கு கூட GST போட்டு விலை ஏறிவிட்டது இதற்க்கு சிக்கனம் தேவை இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X