சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் வினியோக முறைகேட்டால் தட்டுப்பாடு! பேரூராட்சி, 6 ஊராட்சிகள் உள்பட 40 கிராம மக்கள் தவிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் வினியோக முறைகேட்டால் தட்டுப்பாடு! பேரூராட்சி, 6 ஊராட்சிகள் உள்பட 40 கிராம மக்கள் தவிப்பு
Added : அக் 07, 2022 | |
Advertisement
 

பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து வடுகபட்டி பேரூராட்சி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி என 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 40 உட்கடை கிராமங்களுக்கு தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.

சோத்துப்பாறை கூட்டு குடிநீர் 11 கி.மீ. துாரம் குழாய் மூலம் வடுகபட்டிக்கு கொண்டு வந்து பம்பிங் மூலம் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றி பிற கிராமங்களுக்கு அனுப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக முழுமையான குடிநீர் வினியோகம் இல்லாததால் பேரூராட்சி உள்பட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு வழங்க வேண்டிய குடிநீரில் 50 சதவீதம் என தினமும் 5 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. ஆனால் குடிநீருக்காக வழக்கம் போல் அணையில் இருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீர் வரும் வழியில் மாயமாகிறது.



காரணம் என்ன



குடிநீர் வரும் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து விரையமாகிறது. இதை சாதகமாக்கி சில இடங்களில் திட்டமிட்டு குடிநீரை திருடி தென்னை, மா தோப்புகளுக்கும், மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதியில் விளை நிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுவதாக புகார் கூறுகின்றனர்.இதனால் அனைத்து ஊர்களிலும் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.


குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீரை திருடுவோர் மீதும், சேதமடைந்த குழாய் சீரமைக்க நடவடிக்கை வேண்டும். இது குறித்து வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், ''சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வடுகபட்டிக்கு வழங்க வேண்டும். 10 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. வாரியத்திலும் புகார் தெரிவித்துள்ளேன். இதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X