'தமிழின் அடையாளங்களை மறைத்தால் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்': கவர்னர் தமிழிசை
Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: ''தமிழுக்கென உள்ள அடையாளங்கள் மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்,'' என, தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.



latest tamil news



கோவை அவிநாசிலிங்கம் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபட்டிருந்தது. வெளிச்சமாகத்தான் உள்ளது. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் மகிழ்ச்சியே. மின்சாரம் தனியார்மயமாக்கலால் மக்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.






தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன். நெடுங்காலமாக தமிழகத்தின் கலாசாரத்தின் அடையாளங்களை மறைக்கப்பார்க்கின்றனர். அது இனி முடியாது. தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம். ஹிந்து என்பது கலாசாரத்தின் அடையாளம். எதை வேண்டுமானாலும் உங்களுக்கு ஏற்றவாறு திருப்பிக்கொள்வதை ஒப்புக் கொள்ள முடியாது.
தமிழனின் அடையாளம் இறைவழிபாடு. இறைவழிபாடோடு மக்கள் வாழ்க்கை அப்போது இருந்தது. இனிமேலும் அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayen - ,
08-அக்-202206:13:36 IST Report Abuse
ayen சைவம், வைணவம், சமணம் இவர்கள் எந்த கடவுளை வழிப்பாட்டா்கள் என்று ( திருமாவளவன், சீமான், கமல்ஹாசன்) இவர்கள் கூறமுடியுமா? மேற் கூறிய மூன்று இன அரசர்கள் எந்த கடவுளுக்கு கோயில்கள் கட்டினார்கள் என்று கூற முடியுமா? சைவம், வைணவம், சமணம் மூன்றையும் ஒன்றாக இனைத்து இந்து மதம் என பெயர் வைத்து அசுற சக்தி பெற செய்த வெள்ளைக்காரனுக்கு நன்றி. அப்படி உருவானது தான் இந்து மதமே தவிர அந்த மதத்தின் தத்துவங்களையோ, அதன் வழி முறைகளையோ வெள்ளைக்காரன் இயற்றியது இல்லை. நமது முன்னோர்கள் வாழ்கையின் வரை முறைகளை பற்றி சிந்தித்து, ஆறாய்ந்து எப்படி வாழ வேண்டும்? எப்படி வழி பட வேண்டும் என்று எழதி வைத்துள்ளார்கள். நமது மதத்திற்கு பிறகு தொன்றிய மற்ற மதத்தினர் நமது முன்னோர்கள் எழுதியதை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து வழி படுகிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வங்கள் என்ற தத்துவத்தின் படி என்னை ஈன்றெடுத்த எனது பெற்றோர்கள் எனக்கு சொல்லியது நி ஒரு இந்து, எனது பெற்றவர்களின் அறிவுறுத்தலின் படி நான் ஒரு இந்து . நான் எந்த சந்தர்ப்பத்திலும் மதம் மாறாமல் இந்துவாக இருப்பதில் பெருமை படுகிறேன். நான் சாகும் வரை என் பெற்றொரின் சொல் படி இந்துவாக உயிர் விடுவேன். பெற்றொரின் பேச்சை கேளாமல் மதம் மாறியவர்கள் பெற்றவர்களை மதியாதவர்களாகி விடுவார்கள் இவர்களை யார் மதிப்பார்கள். மத போதகர்களோ இல்லை அரசியல்வாதிகளோ நம்முடைய பெற்றார் கிடையாது இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது எனது மதத்தை பற்றி பேச. இவர்கள் யாவருக்கும் நான் கூறிக் கொள்வது என் மதத்திற்கு யார் பெயர் வைத்தால் உமக்கு என்ன நாங்கள் இந்துக்கள், நாங்கள் ஏற்றுக் கொண்டோம். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒதிங்கிவிடுங்கள். யாரையோ சந்தொக்ஷப் படுத்துவதற்காக காசு வாங்கிக் கொண்டு பேச வேண்டாம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202215:37:46 IST Report Abuse
NicoleThomson தமிழின் அடையாளம்?? அது ஏற்கனவே உருதுவிடம் அடகு வைத்து விட்டனரே?
Rate this:
Cancel
07-அக்-202212:30:04 IST Report Abuse
ஆரூர் ரங் ஹாசன் பாய் கூறுவது உண்மையாக இருக்கலாம். 🤔தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தில் உண்மையாகவே அரபி மாலுமியின் சிற்பமும் உள்ளது எனவே எனக்கென்னவோ ராஜராஜசோழன் ஒரு இஸ்லாமியர் என்றுதான் தோன்றுகிறது. மதநல்லிணக்கம் பேணுவதற்கு போனால் போகிறது என பெரிய சிவன் 🥲கோவிலைக் கட்டிக் கொடுத்துள்ளார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X