'டியூகாஸ்' விவகாரம் போராட பா.ஜ., முடிவு
Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


பெ.நா.பாளையம்: 'துடியலுார் டியூகாஸ் விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், பா.ஜ., போராட்டத்தில் ஈடுபடும்' என, மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் கூறினார்.



latest tamil news



கோவை துடியலுாரில் கூட்டுறவு விவசாயம் சேவா ஸ்தாபனம், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் வேளாண்துறை அளித்த உர ஒதுக்கீட்டு அளவைவிட, கூடுதலாக கொள்முதல் செய்ததன் காரணமாக லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று டியூகாஸ் நிறுவனத்துக்கு வந்த பா.ஜ., விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

டியூகாஸ் நிறுவனத்தில், 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும், எவ்வித தொடர்பும் இல்லை. சூப்பர் பாஸ்பேட் என்ற உரம் அதிகப்படியாக கொள்முதல் செய்ததன் காரணமாகவே லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு தனது உத்தரவில், உர கொள்முதல் லைசென்சை மட்டும் ரத்து செய்ய வேண்டுமென கூறியது.

ஆனால், அதற்கு மாறாக, மாநில அரசு, டியூகாஸ் நிறுவனத்தில் மொத்தம் உள்ள, 14 லைசென்ஸ்களையும் ரத்து செய்துள்ளது. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால், 450 கோடி ரூபாய் உர வணிகம் நடைபெறவில்லை.மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி கோவையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash Mahadevan - Thiruvallur,இந்தியா
07-அக்-202212:31:55 IST Report Abuse
Prakash Mahadevan பாஜகவின் முடிவு பாராட்டதக்கது.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
07-அக்-202209:36:50 IST Report Abuse
GMM உரம் அதிகப்படியான கொள்முதல் செய்யும் போது நிதி நிலை பாதிக்கும். மத்திய அரசு கொள்முதல் உரிமம் மட்டும் ரத்து செய்து உள்ளது. மாநிலம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டிய அவசியம்? காங்கிரஸ் ஆளும் போது NTC மில்களுக்கு (லஞ்சம் பெற்று) தேவைக்கு மேல் பருத்தி கொள்முதல் செய்து நிதி நெருக்கடி உருவாக்கி, மில்கள் நசிந்தன? உள்ளுர் நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்கள் காங்கிரஸ், திமுகவிற்கு பிடிக்காது?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-அக்-202209:17:32 IST Report Abuse
Girija இந்த பிரச்சனை பற்றி கோவை பெண் எம் எல் ஏ இரண்டு வாரம் கழித்து கூடும் சட்டமன்ற கூட்டத்தில் எடுத்துரைப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X