கர்மாவின்படி போலீஸ் இடமாறுதல் ரத்து; தனி நீதிபதி உத்தரவிற்கு தடை
Added : அக் 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை ஸ்ரீமுருகன் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரிந்தேன். என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டனர்.இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: மனுதாரர் 2011 ல் விபத்தில் சிக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அடிக்கடி தலைச்சுற்றல், தலைவலியால் சில நேரங்களில் விதிகளை பின்பற்றாமல் மருத்துவ விடுப்பு எடுத்ததாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்தார்.மனுதாரர் நேர்மையானவர். உயரதிகாரி அல்லது வேறு யாரின் அழுத்தத்திற்கும் அவர் அடிபணிவதில்லை. மனுதாரர் 18 மாதங்களில் 4 இடமாறுதல்களை எதிர்கொண்டார் என தெரிவித்தது.தமிழக அரசுத் தரப்பு: மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை. அவர்களுக்கு எதிராக செயல்பட்டார். அவருக்கு சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரரின் தவறான செயல்கள் குறித்து ஐ.ஜி.,க்கு அறிக்கை அனுப்பப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக மனுதாரர் துாத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என தெரிவித்தது.

நீதிபதி: கர்மா கொள்கை மூலம் இந்நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முன்வருகிறது. கர்மா கொள்கைகளில் 'சஞ்சித கர்மா' (முழு கர்மா), 'பிராரப்த கர்மா' (கர்மாவின் ஒரு பகுதி) எனப் பிரிக்கப்பட்டு, 'பிராரப்த கர்மா'விற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. மனுதாரரை தொலைதுார இடத்திற்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக துயரத்தை அதிகரிக்கும். மனுதாரருக்கு எதிரான இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை போக்குவரத்து காவலராக மதுரை மாவட்டத்தில் நியமிக்க ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது என்றார்.இதை எதிர்த்து ஐ.ஜி.,மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.குமரேஷ் பாபு அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, 2 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X