புதுடில்லியில் 11 வயது பள்ளி மாணவி பலாத்காரம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
புதுடில்லியில் 11 வயது பள்ளி மாணவி பலாத்காரம்
Added : அக் 07, 2022 | |
Advertisement
 

புதுடில்லி: புதுடில்லியில் உள்ள, 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவி இரு, 'சீனியர்' மாணவர்களால் பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு டில்லி பெண்கள் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

புதுடில்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்கள் இருவர் கடந்த ஜூலையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் டில்லி பெண்கள் கமிஷனுக்கு தெரியவந்ததும், மாணவியின் பெற்றோர் போலீசில் கடந்த 4ம் தேதி புகார் அளித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பள்ளி முதல்வருக்கு டில்லி பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இந்த புகார் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு டில்லி போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.'இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளிக்கவில்லை' என, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X