கொரட்டூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், 40, கொரட்டூர் சிக்னல் அருகே, துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை மூட 'ஷட்டரை' இழுத்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக ஷட்டரில் ஒளிந்திருந்த, ௬ அடி நீள சாரைப்பாம்பு ஒன்று கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், அம்பத்துார் எஸ்டேட் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, 6 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். 'இந்த பாம்பு, அடர் வனப்பகுதியில் விடப்படும்' என, தீயணைப்பு துறையினர் கூறினர்.