விருகம்பாக்கம்,விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா, 70. இவர் நேற்று காலை 6:00 மணியளவில், தாராசந்த் நகர் வழியாக நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சகுந்தலாவின் 3 சவரன் செயினை பறிக்க முயற்சித்தார். சகுந்தலா கொள்ளையனிடம் போராடினார். ஆத்திரமடைந்த கொள்ளையன், சகுந்தலாவை கீழே தாக்கி கீழே தள்ளி 2 சவரனுடன் தப்பித்தான். புகாரையடுத்து அதிரடியாக செயல்பட்ட விருகம்பாக்கம் போலீசார், செங்கல்பட்டு, திம்மாவரத்தைச் சேர்ந்த ரமேஷ், 40, என்பவரை கைது செய்தனர்.