சென்னை, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், இன்று காலை 8:30 மணிக்கு, அய்யப்பனின் அவதாரங்களான அஸ்வாரூட சாஸ்தா எனும் வீர சாஸ்தா மற்றும் கால சாஸ்தா எனும் மஹா சாஸ்தாவுக்கு, விசேஷ ஹோமம் நடைபெற உள்ளது. இதில் சர்மா சாஸ்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு, சுந்தர் ஜெயராமனின் மகன், கோவை ஜெயராமன் பங்கேற்கும் ஹரிஹரபுத்ர நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் டெல்லி கணேஷும், பஜன் கலைஞர் கடலுார் ஸ்ரீ கோபி பாகவதரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.