பெண்கள், குழந்தைகள்ஆலோசனை மையம் திறப்பு
Added : அக் 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை, சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 'நிர்பயா' திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் செயல்படுகிறது.இங்கு, சமூக நல ஆலோசகர், சட்ட ரீதியான ஆலோசகர், குழந்தைகள் மன நல ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பாலியல் மற்றும் குடும்ப வன்முறை வாயிலாக பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 'கவுன்சிலிங்' அளித்து வருகின்றனர்.இந்த மையத்தை, எழும்பூர், காவல் மருத்துவமனை அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டது. அங்கு தான், முதன் முதலாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டது.

தற்போது, அங்குள்ள புது கட்டடத்திற்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் மாற்றப்பட்டுள்ளது.இதை, அமைச்சர் கீதா ஜீவன் நேற்று திறந்தார். இதற்கான நிகழ்ச்சிக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, நடிகை சாய் பல்லவி பங்கேற்றார்.இந்த ஆலோசனை மையம் வாயிலாக, மகளிர் காவல் நிலையத்தில் பதிவான மற்றும் இதர அமைப்புகள் வாயிலாக பதிவான, 508 வழக்குகள் தொடர்பாக பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், 8 சதவீதம் பேர் ஆண்கள்; 92 சதவீதம் பேர் பெண்கள்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X