'ஹிந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை': கமல் சார்பில் திடீர் விளக்கம்
Added : அக் 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:'ஹிந்து மதம் இருப்பதை மறுக்கவில்லை' என்று, நடிகர் கமல் கூறியதாக, அவரது நண்பரும், எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கல்கியின், 'பொன்னியின் செல்வன்' நாவலை, அதே பெயரில் சினிமா படமாக, இயக்குனர் மணிரத்தினம் எடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து, விழா ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், 'ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக சித்தரிப்பதன் வாயிலாக, தமிழர்களின் அடையாளங்களை மாற்ற முயற்சி நடக்கிறது'என்றார். அதற்கு, ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ., தரப்பில் பலரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், 'ஹிந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது.ஹிந்து என்பது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர்' என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.,வினர், 'ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதம் இல்லை என்றால், ஜாதி வேறுபாடுகளுக்கு ஹிந்து மதம் தான் காரணம் என்று இவ்வளவு காலமாக பேசியது தவறு என்பதை கமல் ஒப்புக்கொள்கிறாரா?' என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் கமலின் நண்பரும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் தன் 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:கமலுடன் கலந்துரையாடினேன். '10-ம் நூற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அப்போது ராஜமகேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது. அதுபோல எளிமையானதே ஹிந்து மதம் பற்றி, நான் சொன்ன கருத்து.'ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள், 'சைவர்' என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் 'வைணவர்' என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். ஹிந்து மதம் இருப்பதை, நான் மறுக்கவில்லை' என்று, என்னிடம் கமல் கூறினார். இதை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X