சிலவரி செய்திகள்: நாமக்கல்
Added : அக் 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விவசாயிக்கு கத்திகுத்து

மல்லசமுத்திரம்,-மல்லசமுத்திரம் அருகே உள்ள பெரியகோட்டபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 79. விவசாயியான இவர், மனைவியுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 12.30 மணியளவில், சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததைப் பார்த்து, திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். அந்த நபர், தான வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனை, மூன்று இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சவுதாபுரத்தில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா அவசியம்பள்ளிபாளையம்,-பள்ளிபாளையம் அருகே சவுதாபுரம் சுற்றுவட்டாரம் பகுதி கிராமப்புறத்தை உள்ளடக்கியது. அங்குள்ள பெரும்பாலான மக்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகளை, மர்மநபர்கள் திருடி சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் சாலையோரத்தில் சிலர், மது அருந்தி வருகின்றனர். நாளுக்குநாள் இது அதிகரித்து வருகிறது. புதிய நபர்கள் நடமாட்டம், சாலையோரத்தில் மது அருந்துதல், ஆடுகள் திருட்டால், சவுதாபுரம் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, புதிய நபர்களை கண்டறியவும், திருட்டில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கவும், இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சிசேந்தமங்கலம்,-தமிழ்நாடு மனித உரிமைகள் நல ஆணையத்தின் சார்பில், பழங்குடியின மக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, சிறப்பாக செயல்படுவதற்கான பயிற்சி முகாம், கொல்லிமலை நல்லதம்பி ஹோட்டலில் நடந்தது. முகாமுக்கு தின்னனுார்நாடு பஞ்., தலைவரும், கூட்டமைப்பு தலைவருமான ஜெகதீசன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு மனித உரிமை மேம்பாடு, ஆராய்ச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா பங்கேற்று, பழங்குடியின மக்களின் உரிமைகள், கடமைகள், கிராம சபையை வலிமைப்படுத்துதல், கொல்லிமலை பகுதியில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் முறைகள், நிதி வளம், கணக்குகளை பராமரிக்கும் முறைகள், உள்ளாட்சிக்கான அரசு திட்டங்கள், அணுகும் வழிகள் முறைகள், உள்ளாட்சி குழுக்கள் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். பயிற்சி முகாமில் சமூக பொருளாதார அலுவலர் தாஸ், நாமக்கல் மாவட்ட ஹோம் டிரஸ்ட் இயக்குனர் குப்பன், பஞ்., தலைவர்கள் ஈஸ்வரன், நாகலிங்கம், தனசேகரன், பழனிசாமி, பிரகாஷ், செல்வம், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போலி லாட்டரி விற்பனை முதியவர் உள்பட 6 பேர் கைதுகுமாரபாளையம்,-குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற, 77 வயது முதியவர் உள்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில், மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி, பொதுமக்களை ஏமாற்றி, லாட்டரி விற்றது தெரிய வந்தது.இதில் ஈடுபட்ட ஈரோடு ரமேஷ், 25, பள்ளிபாளையம் தினேஷ்குமார், 30, குமாரபாளையம் வெங்கடேசன், 34, ஈஸ்வரமூர்த்தி, 36, அல்லிமுத்து, 57, தம்மண்ணன் வீதியைச் சேர்ந்த லோகநாதன், 77, ஆகிய, 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 5 மொபைல்போன்கள், போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

பேரிடர் மீட்பு குழு : செயல்முறை விளக்கம்திருச்செங்கோடு,-திருச்செங்கோட்டில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், எஸ்.ஐ.,கள், அருண்குமார், முனுசாமி ஆகியோர் தலைமையில், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் மீட்பது குறித்து, நேற்று செயல் விளக்கம் அளித்தனர்.ஆபத்தில் சிக்கியரை கைகளில் துாக்கிச் செல்வது, கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு ஸ்டெச்சர்கள் செய்வது, நீரில் தத்தளிப்பவர்களை கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பது, ரத்த காயங்களுடன் இருப்பவர்களை மீட்பது, மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து, செயல்முறையில் விளக்கம் அளித்தனர். இதில் திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி, ஆர்.டி.ஓ., கவுசல்யா, தாசில்தார் அப்பன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X