'நெல் நடவுக்கு ஆட்கள் பற்றாக்குறை'
Added : அக் 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பள்ளிபாளையம்,: பள்ளிபாளையம் பகுதியில் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் கடந்த ஜூலை, 16ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில், வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் வயல்களில் தண்ணீர் பாய்ச்சி, உழவு பணியில் ஈடுபட்டனர். கடந்த, இரண்டு வாரங்களுக்கு மேலாக நடவு செய்யும் பணி நடக்கிறது. ஆனால், ஆட்கள் பற்றாக்குறையால், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து நடவு பணி மேற்கொள்ளப்படுகிறது.இதுகுறித்து மோளகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியதாவது: தேவூர், எடப்பாடி உள்ளிட்ட வெளியூரில் இருந்து நெல் நடவு பணிக்கு குழுவாக வருகின்றனர். ஒரு ஏக்கர் நடவு செய்ய, 8,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். அதற்கும் ஆள் கிடைப்பதில்லை. ஒரு வயலில் நடவு முடித்த பின் தான், அடுத்த வயலுக்கு வருகின்றனர். அதுவரை காத்திருக்க வேண்டி உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி தாமதமாகிறது. இதனால் அறுவடையும் தாமதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X