சேந்தமங்கலம்,-சேந்தமங்கலத்தில் புகழ்பெற்ற சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.மிகவும் பழமையான இக்கோவிலில், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சேந்தமங்கலம், வெண்டாங்கி, ஆர்.பி.புதுார், காந்திபுரம், அக்கியம்பட்டி, வடுகப்பட்டி, அக்கியம்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.சவுந்தரவள்ளி அம்பாள் மற்றும் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்களுக்கு கயிலை மலையான் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.* ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில், நானூறு ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு, புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 5:00 மணிக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:15 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.கோவிலில் நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. பின், ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதேபோல், ப.வேலுார் சுற்று வட்டாரத்தில் உள்ள பல கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.