நாகர்கோவில்:குமரியில் புலித்தோல் விற்க முயன்ற நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புலித்தோல் விற்பனை நடப்பதாக டில்லி மத்திய உயிரின குற்றப்புலனாய்வு துறையினர் அளித்த தகவலில், நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் புலித்தோலை விற்க முயன்ற நல்லுார் ரமேஷ், 36, துாத்துக்குடி டி.எம்.பி., காலனி இமமானுவேல் தனராஜ், 34 ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் துாத்துக்குடி சாயர்புரம் ராஜா, 36, திருநெல்வேலி நாங்குநேரி ஜெயகுமார், 38, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து புலித்தோலும், 15 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் கைதான இவர்கள் நால்வரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புரோக்கராக செயல்பட்ட நாகர்கோவில் ராமபுரத்தை சேர்ந்த செந்தில் சுப்பிரமணியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து புலித்தோல் எடுத்து வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.