- ஆன்மிகம் -
*கோடி அர்ச்சனை: தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் கணபதி ஹோமம், அய்யப்பனுக்கு கோடி அர்ச்சனை - காலை 6:00 மணி முதல் பிற்பகல் 11:30 மணி வரை. சப்த மிருத்யுஞ்ஜய ஹோமம் - காலை 8:00 மணி. அன்னதானம் - நண்பகல், 12:00 மணி. கோடி அர்ச்சனை தொடர்ச்சி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. அன்னதானம் - இரவு 8:30 மணி. இடம்: தர்மசாஸ்தா - குருவாயூரப்பன் கோவில், 31 - 32, 31வது தெரு, சங்கரா நகர், பம்மல், சென்னை - 75. தொடர்புக்கு: 94444 44238.
*கூட்டு பிரார்த்தனை: திருவருட்பிரகாச வள்ளலாரின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை. பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: தீபம் அறக்கட்டளை, நித்திய தீப தர்மசாலை, புத்தேரிக்கரை, வேளச்சேரி, சென்னை - 600 042. தொடர்புக்கு: 94440 73635.
*ஷீரடி சாய் வழிபாடு: சிறப்பு அபிஷேக, அலங்கார ஆரத்தி, அன்னதானம் - காலை 8:00 முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: ஆத்ம சாய்நாதர் கோவில், 60, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 73585 62872.
*ராகவேந்திரர் பூஜை: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை. மாலை 6:00 மணி முதல். இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை, சென்னை - 600 100.
* ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திர விழா: நேரம்: காலை 6:15 மணி முதல் 7:45 மணி வரை திருவாரதனம். மாலை 6:00 ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திர விழா. இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.* அய்யப்ப சுவாமி வீதி புறப்பாடு
நேரம்: மாலை 6:00 மணி முதல் மடிப்பாக்கம், அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பாபிஷேகம், படி பூஜை மற்றும் சபரிசாலை, கார்த்திகேயபுரம், மடிப்பாக்கம், கிராமம், நியூ குபேரன் நகர் பகுதியில் உற்சவர் வீதி புறப்பாடு. இடம்: மடிப்பாக்கம் அய்யப்பன் கோவில்.
- சொற்பொழிவு -
* பகவத் கீதை மஹோற்சவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பிலான பகவத் கீதை பாராயணம், உபன்யாசம். நிகழ்த்துபவர் வி.ஸ்ரீதரன், மாலை 6:30 இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை. தொடர்புக்கு: 94440 42395
*கங்காஷ்டகம்: ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.
துவக்க விழா: சிறு அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் பத்துப்பாட்டு தொடர் சொற்பொழிவு துவக்க விழா: தலைமை: முனைவர் க.ஸ்ரீதரன், பங்கேற்பு: சொ.பத்மநாபன், இளவரச அமிழ்தன், புலவர் சேயோன், நிசார் சேட், மாலை, 5:30 மணி. இடம்: ஆந்திரா சேம்பர் ஆப் காமர்ஸ், 23, மூன்றாவது குறுக்குத் தெரு, மேற்கு சி.ஐ.டி., நகர், சென்னை - 35.
- பொது -
* சிறுசேமிப்பு சிறப்பு முகாம்: நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிறுசேமிப்பு முகாம். இடம்:பாரிமுனை, சென்னை பொது அஞ்சலகம்.
*கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி
நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, ராஜஸ்தான் மாநில கைவினைஞர்கள், நெசவாளர்கள் சார்பில் நடத்தும் கைவினை, நெசவு பொருட்கள் கண்காட்சி. இடம்: செல்லம்மாள் சக்தி மஹால், மேடவாக்கம் பிரதான சாலை மடிப்பாக்கம்.
* தீபத் திருவிழா
நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'தீபத்திருவிழா' எனும் பெயரில் விளக்குகள் கண்காட்சி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை.*இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம். சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.