தொழில்நுட்ப கோளாறு மின்சார ரயில் சேவை பாதிப்பு
Added : நவ 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:தாம்பரம் ரயில் நிலையம் நடைமேடை 4ல் இருந்து நேற்று மதியம் 1:25 மணி அளவில் புறப்பட்ட, தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில், மின்சாரத்தை கடத்தும் 'பேன்டோகிராப்' கருவியில் திடீரென பழுது ஏற்பட்டதால் ரயில் நின்றது.

இதையடுத்து, ரயில் ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மின்சார ரயில்களுக்கான மின் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதனால், அங்குள்ள நடைமேடை 1, 2, 3, 4ல் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து, புறப்பட வேண்டிய ஆறு மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு மணி நேரம் வரையில், தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

தாம்பரம், சானிட்டோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.

மின்சார ரயிலில் காத்திருந்த பயணியர் சிலர், அருகே உள்ள பேருந்து நிலையங்களுக்கு சென்றனர்.

பின், மாலை 3:30 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

4 ரயில்கள் ரத்து

தாம்பரம் ரயில்வே யார்டில் உள்ள ரயில் பாதைகளில், நாளையும் நாளை மறுநாளும் நள்ளிரவு 12:40 மணி முதல் அதிகாலை 2:10 மணி வரையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, இரவு 11:59 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன

 தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 11:20 மணி, இரவு 11:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன என, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X