சென்னை :கர்நாடக சங்கீதத்தில் வயலின் ஜாம்பவான்களின் இசையை பிசிறில்லாமல் பிரதி எடுத்து, ரசிகர்களுக்கு விருந்து வைப்பவர்கள் தான், அக்கரை சகோதரியரான சுப்புலட்சுமியும் சொர்ணலதாவும்.
இவர்களின் கச்சேரிகளில், ஆண்டாள் திருப்பாவை முதல் லால்குடி ஜெயராமன் வரை கலந்து கட்டும்.
இவர்களின் வயலின் டூயட் இசை, டிச., 15ம் தேதி மாலை 7:00 மணிக்கு, டி.டி.கே., சாலையில் உள்ள மியூசிக் அகாடமி; 19ல் மாலை 6:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரம்ம கான சபாவில் நடக்கிறது.
வரும் 30ல் மாலை 6:30 மணிக்கு, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் மார்கா அரங்கு; அடுத்தாண்டு ஜன., 9ல் மாலை 6:30 மணிக்கு, மடிப்பாக்கம், பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா ஆகியவற்றில், நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
அதேபோல, இவர்களின் வாய்ப்பாட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு, மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபா; டிச., 20ம் தேதி மாலை 6:15 மணிக்கு வாரண் சாலை ராமானுஜம் அரங்கம்.
21ல் மாலை 4:00 மணிக்கு, மயிலாப்பூர் பாரதி கல்யாண மண்டபம்; 22ல் மாலை 6:30 மணிக்கு நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 23ல் மாலை 6:30 மணிக்கு மயிலாப்பூர், சாஸ்திரி அரங்கில் உள்ள சென்னை பைன் ஆர்ட்ஸ் சபா; 24ல் மாலை 4:00 மணிக்கு, தி.நகர் கிருஷ்ணகான சபா; 27ல் மாலை 4:30 மணிக்கு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா; 28ல் மாலை 6:30 மணிக்கு மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் ஆகிய இடங்களில் இடம்பெறுகிறது.