குப்பை கொட்டுவதால் சீர்கேடு
அடையாறு மண்டலம், 171வது வார்டு, கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை பொதுப்பணித் துறை செய்கிறது.
தொட்டியில் கொட்டும் குப்பையை, மாநகராட்சி அகற்றுகிறது. திறந்தவெளி, சாலைகளில் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்டு உள்ளது.
ஆனால், சில பொதுப்பணித் துறை ஊழியர்கள், குடியிருப்பு வளாக குப்பையை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். குப்பை நனைந்து, அதில் இருந்து துர்நாற்றம் வீசி, நோய் பரப்பும் கிருமிகள் உருவாகின்றன.
இதனால், அமைச்சர்களை பார்க்க செல்லும் அதிகாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குப்பையை முறையாக கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும்.