சோழிங்கநல்லுார் :சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்கத்திற்கு முன் இந்த மண்டலம், பேரூராட்சி, ஊராட்சியாக இருந்தது. அப்போதுள்ள ஆவணங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆணவங்கள், மண்டல அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டன. இதில், சில ஆவணங்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்த சில ஆவணங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், தணிக்கை சார்ந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தரைத்தளத்தில் உள்ள ஆவணம் பாதுகாப்பு அறையில், மாயமான ஆணவங்களை தேடும் பணியல், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மண்டல அதிகாரிகள் கூறுகையில், 'அறையில் நீர் கசிவு இருப்பதால், சில ஆணவங்களை மாற்று அறையில் எடுத்து வைக்க சுத்தம் செய்கிறோம்' என்றனர்.