தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், 1,200 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.
மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று முன்தினம், தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, பணியாளர் பிரதிநிதிகளுடன், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், நகர் நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் நேற்று, பேச்சு நடத்தினர்.
இதில், மாதந்தோறும், 5ம் தேதி ஊதியம் வழங்கவும், அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.