மதுரவாயல், போரூர், காரப்பாக்கம், தர்மராஜா நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 70. இவர், கடந்த 15ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது, வீட்டில் இருந்த, 11 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகர், ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ், 31, என தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 11 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.