பெரும்பாக்கம், உலக கழிப்பறை தினம், 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் நவ., 19ம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, 'கண்ணுக்கு தெரியாததை காணச் செய்தல்' எனும் தலைப்பில், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில், பெரும்பாக்கம் ஊராட்சி சார்பில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நேற்று, உறுதி மொழி ஏற்கப்பட்டது.இதையடுத்து, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் சுஹாசினி துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் வாசுகி, ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, செம்மொழி பூங்கா, மேட்டுத்தெரு, அண்ணா சாலை, நுாக்கம்பாளை சாலை வழியாக சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தங்கள் பகுதியை துாய்மையாக வைத்துக் கொள்வதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.