ராயபுரம் ராயபுரம் மண்டலம், 56வது வார்டு அலுவலகத்தில், இம்மாதம் 21ம் தேதி, குப்பை பேட்டரி வாகனங்களில் இருந்த மூன்று பேட்டரிகள், மர்ம நபர்களால் திருடப்பட்டன.
இது குறித்து, ராயபுரம் மண்டல துப்புரவு ஆய்வாளர் மலையாதிரி, வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் மூவர், பேட்டரி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் நேற்று, அவர்களிடம் இருந்த, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று பேட்டரிகளை பறிமுதல் செய்து, சிறுவர்களை எச்சரித்து அனுப்பினர்.
மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பழனி, பேட்டரிகளை கண்டுபிடிக்க உதவிய துப்புரவு ஆய்வாளர்கள் மலையாதிரி, முத்து ஆகியோரை, சால்வை அணிவித்து பாராட்டினார்.