கோயம்பேடு பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 42. இவர், வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில் சென்றபோது, அவ்வழியே அதிவேகமாக வந்த வேன் ஒன்று திடீரென பாலமுருகன் சென்ற 'டி.வி.எஸ்., சி.டி 100' இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய டெம்போ டிராவலர் வேன் ஓட்டுனரான, அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்த ஜெகநாதன், 44, என்பவரை கைது செய்தனர்.