அரியாங்குப்பம்-அரியாங்குப்பத்தில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அரியாங்குப்பம், காமராஜ் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாநில மீனவரணி தலைவர் பழனி, தொகுதி பொறுப்பாளர் வசந்தராஜ் முன்னிலை வகித்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி வரவேற்றார்.
கூட்டத்தில், சிறப்புரையாற்றிய தேசிய செயலாளர் அருண் சிங் பேசுகையில், தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் தொடர்புடைய காசியில் இருந்து வந்துள்ளேன். நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய கிளையை வலுப்படுத்தி, வரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய் சரணவன்குமார், மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.