புதுச்சேரி-உருளையன்பேட்டை தொகுதியில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம், ஸ்ரீதர், ராஜேஷ் சென்னிஹியால், செயற்பொறியாளர்கள் கனியமுது, செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் கண்ணன், திலகராஜ், ஜானகிதேவி, இளநிலை பொறியாளர்கள் கார்த்திகேயன், அச்சிதானந்தம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனையின் போது தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளான புதைவிட மின் கேபிள்கள் அமைப்பது, அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.