வாய்க்காலில் துார்ந்துள்ள மணல்
புதுச்சேரி மிஷன் வீதி - காந்தி வீதியில் சாலை போடுவதற்கு கற்கள், மணல் கொட்டி பல மாதங்களாகியும் பணி நடக்கவில்லை. இந்த கல், மணல் வாய்க்காலை அடைத்துள்ளது.
அழகர், ராஜ்பவன்.
விஷப் பூச்சிகளால் அச்சம்
நெல்லித்தோப்பு, அண்ணா தெருவில்காலி மனையில் புதர் மண்டியுள்ளதால் விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
புவனா, நெல்லித்தோப்பு.
பன்றி தொல்லையால் சுகாதார சீர்கேடு
மங்கலம், கணபதி நகர், ஆச்சார்யாபுரத்தில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சிவப்பிரகாசம், ஆச்சார்யாபுரம்.
நாய் தொல்லையால் மக்கள் அச்சம்
முதலியார்பேட்டை பாலம் - அரும்பார்த்தபுரம் செல்லும் சாலை வரையில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளால் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
சக்திவேல், முதலியார்பேட்டை