கம்பம் : சபரிமலை சீசனை முன்னிட்டு விபத்து பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கார்த்திகை முதல் நாளே ஆயிரக்கணக்கில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்றன. குமுளி, கம்பமெட்டு ரோடுகளில் தினமும் இரவு பகலாக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.
எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க தேனி மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். குறிப்பாக கம்பமெட்டு, குமுளி மலைச்சாலைகளில் ஆபத்தான இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கவும், இரவு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்.
கம்பமெட்டு ரோடு ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்ட பின், கேரளாவிற்குள் பக்தர்கள் சிரமமின்றி செல்ல கம்பமெட்டு வழியில் உள்ள ஊர்கள் செல்லும் பாதை தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும்.
தேனி மாவட்ட போலீசார், வட்டார போக்குவரத்து துறையினர் இப் பணிகளை விரைந்து செய்து, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது அவசியமாகும்.