காரைக்கால்-- -வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் கல்லுாரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட்டு சாதனை படைந்த இயற்கை விவசாயி பாஸ்கர் வயலில் அனுபவ பயிற்சி மேற்கொண்டனர்.
இயற்கை விவசாயி பாஸ்கர் தனது அனுபவங்களை மாணவர்ளுக்கு விளக்கினார். இதில் மரபு ரகங்களின் பிரத்தியோக பண்புகள், சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கூறினார்.
இதில் கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடையான். காட்டுயானம் போன்றவற்றை விளக்கினார். இதில் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது கருப்புக்கவுனி. நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து. அதிக நார்ச்சத்து நிறைந்தது. உடலில் நச்சுத்தன்மையை விலக்கி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாயு, தோல் நோய்க்கு நல்ல மருந்து.
இதேபோன்று ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகத்திற்கும் ஒரு குணமுள்ளது. ஆகையால் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட வேண்டும்.
அதன் மூலம் உணவே மருந்து மற்றும் மருந்தே உணவு" என்பது வாழ்வியலாக மாறும் என்றார்.
பாரம்பரிய நெல் ரகங்களின் ஒரு கிலோ விதைகளை சராசரியாக 60 ரூபாய்க்கு விற்பதாக கூறினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவிகள் அபிநாயா, ஸ்ரீதாரணி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.